< Back
மாநில செய்திகள்
கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:30 AM IST

மேலஆத்தூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகநேரி:

காந்தி ஜெயந்தியையொட்டி மேலஆத்தூரில் கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலர் மேரி கவிதா முன்னிலை வகித்தார். கிராம பஞ்சாயத்து செயலர் சுமதி வரவேற்று பேசினார்.

கிராம நிர்வாக அலுவலர் ஜெய்லானி பீவி, தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்பெல்மென், மேலஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் ஞானதுரை, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கிர் முகைதீன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்