< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெறும் மையங்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெறும் மையங்கள் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
2 Dec 2022 5:38 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெடர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.

எம்.எல்.எம்.மாமல்லன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பெரிய காஞ்சீபுரம். பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தாண்டவராய நகர், ஓரிக்கை, பெரிய காஞ்சீபுரம், எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, பெரிய காஞ்சீபுரம்.

ஆதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சங்கராபுரம், வாலாஜாபாத் எம்.சி.ஏ. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பழைய சீவரம், வாலாஜாபாத், செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி, பாரதி நகர், வாலாஜாபாத்.மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்மீனாட்சி அம்மாள மெட்ரிக் மேல்நிலை பள்ளி, உத்திரமேரூர். மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி, பெருங்கோழி, உத்திரமேரூர். மகரிஷி பள்ளாட்டு உறைவிட பள்ளி, சுங்குவார் சத்திரம், மாதா என்ஜினீயரிங் கல்லூரி, குன்றத்தூர்.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியானேhttps://agaram.tn.gov.in/olineforms/formpage-open.phd?id=43-174என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டு்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக் கூடாது.

விண் ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்