< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|15 March 2023 2:05 AM IST
பாபநாசத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம்;
பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் வட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினாா். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப் படிப்பு ஊக்க ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்பு, ஊதியம் வழங்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ், கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன், மற்றும் பலர் கலந்து கொண்டனா்.