< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் 3-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் 3-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு

தினத்தந்தி
|
31 Dec 2022 10:16 PM IST

செய்யாறு, வந்தவாசி உள்பட 4 தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருகிற 3-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு செய்து்ளனர்.

செய்யாறு

செய்யாறு, வந்தவாசி உள்பட 4 தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வருகிற 3-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு செய்து்ளனர்.

உயர்மட்ட குழு கூட்டம்

செய்யாறில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ரமேஷ் தலைமைத் தாங்கினார். செயலாளர் ஏ.ஏழுமலை முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ந.சுரேஷ் பங்கேற்றார். கூட்டத்தில் தொடர் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், வெம்பாக்கம் வட்டக்கிளை உறுப்பினர் ஜி.பச்சையப்பனை எவ்வித முகாந்திரமும் இன்றி, சேத்துப்பட்டு வட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டதை கண்டித்தும், மீண்டும் அவரை அதே இடத்தில் பணியிடம் வழங்கிட வலியுறுத்தியும் செய்யாறு உதவி கலெக்டரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதனைத் தொடர்ந்து இனையதளம் தொடர்பான பணிகளை புறக்கணிப்பது, ஜனவரி 3-ந் தேதி செய்யாறு கோட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஓட்டு மொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பது, 4-ந் தேதி செய்யாறு வருவாய் கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களும் உதவி கலெக்டர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

4 தாலுகாக்கள்

இதில் கோட்டத்தில் உள்ள செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய நான்கு வட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டும் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் சே.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்