< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|25 March 2023 12:30 AM IST
சீர்காழியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பவளச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.