< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
|31 Aug 2023 3:02 PM IST
பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 14 வாரங்கள் நடைபெறும். இந்நிலையில், ஆணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு இக்கோவிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் 108 பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, தேரில் பவானி அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், உற்சவர் வெள்ளி கவசத்திலும் பிரகார புறப்பாடு நடந்தது.