ராமநாதபுரம்
அங்கன்வாடி சீர்வரிசை வழங்கும் விழா
|அங்கன்வாடி சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு கிராம புனரமைப்பு இயக்கம், மற்றும் சென்னை தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி தினத்தை கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ஒன்றியம் வேதக்காரன்வலசை, ராமநாதபுரம் ஒன்றியம் வன்னிக்குடி, மண்டபம் ஒன்றியம் தாமரையூரணி, போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி, பரமக்குடி ஒன்றியம் நல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள 5 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த மையங்களில் அங்கன்வாடி தினம் மற்றும் அங்கன்வாடி சீர்வரிசை வழங்கும் திருவிழா நடத்தப்பட்டது. விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் விஸ்வபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம புனரமைப்பு இயக்கத்தின் திட்ட இயக்குனர் கருப்பசாமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலா, பஞ்சவர்ணம், இந்திராகாந்தி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, அனைத்து மகளிர் காவல்நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் கலா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சித்ரா ஆகியோர் சிறப்புரை யாற்றி சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். கிராம தலைவர்கள் ஆறுமுகம், வடிவேல் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அந்தந்த கிராம பொதுமக்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.