ராமநாதபுரம்
மீனவர் தினவிழா பேரணி
|மீனவர் தினவிழா பேரணி நடந்தது.
ராமேசுவரம்,
சர்வதேச மீனவர் தினத்தையெத்ஙி தங்கச்சி மடத்தில் நேற்று மண்டபம் ஒன்றிய மக்கள் அமைப்பு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு தமிழகப் பெண்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். முனைவர் பிரிட்டோ ஜெயபாலன் முன்னிலை வகித்தார். காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமேசுவரம் நகரசபை சேர்மன் நாசர் கான், விசைப்படகு மீனவ சங்க தலைவர் சேசு ராஜா, மீனவ மக்களமைப்புத் தலைவி இருதய மேரி, கர்லோபா, நாட்டு படகு மீனவ சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன், ஒன்றிய மக்கள் அமைப்பின் தலைவி மோட்சராக்கணி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன்பிடிப்பதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் இலங்கை கடற்படையால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் நாட்டுப்புற மீனவர் சங்க தலைவர் எஸ்.பி ராயப்பன் மற்றும் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சங்க தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் தலைமையில் ஏராளமான மீனவர்கள் கடலில் இறங்கி கடல் தாய்க்கு மலர் தூவி மீனவர் தினத்தை கொண்டாடினர். ராமேசுவரம் சங்கு மால் கடல் பகுதியில் தமிழக மீனவர் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பைபர் படகு ஒன்றின் மூலமாக சென்ற மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் வக்கீல் பிரின்ஸோ ரேமண்ட் தலைமையில் மாநில இளைஞரணி செயலாளர் பிரதீப், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு வசந்தன், நகர செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து மீனவர் தினத்தை கொண்டாடினர்.