ராமநாதபுரம்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
|கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.
சத்திரக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வக்கீல் கதிரவன், போகலூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி அனைவரையும் வரவேற்றார். இதில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சதாசிவம், திட்ட மேற்பார்வையாளர் லெட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.