< Back
மாநில செய்திகள்
பரமக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பரமக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி
|
10 Nov 2022 10:16 PM IST

பரமக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

பரமக்குடி,

பரமக்குடியில் முக்கிய இடங்களில் உள்ள பயணிகள் நிழற் குடைகளை சுத்தம் செய்து அங்கு பஸ்சில் செல்ல காத்திருக்கும் பொதுமக்களின் வசதிக்காக நிழல் தரும் மரங்களை நடும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா பரமக்குடி நகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் நடந்தது. விழாவிற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் செந்தில் சுரேஷ் தலைமை தாங்கினார். அண்டக்குடி ஊராட்சி தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதையொட்டி ஐந்து முனை பகுதியில் உள்ள பயணிகள் நிழற் குடைகளை போலீசார் சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனர். இதில் காவலர்கள் கண்ணுச்சாமி, மனோகரன் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்

Related Tags :
மேலும் செய்திகள்