ராமநாதபுரம்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
|கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
முதுகுளத்தூர்,
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி முதுகுளத்தூர் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஷ்வாவதி, நவாஸ் கனி எம்.பி. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு சீதன பொருட்கள் மற்றும் அவரது சொந்த செலவில் 300 பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார்.