< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண

தினத்தந்தி
|
1 Nov 2022 12:09 AM IST

திருப்பத்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள முருகன் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தினமும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்திலிருந்து பெண்கள் திருமண சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்து ராஜகாளியம்மன் கோயில் திருமுருகன் கோவிலை வலம் வந்து திருமணப் பந்தலில் வைத்தனர். திருமண மேடையில் திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத உற்சவ முருகன் எழுந்தருளினா்ர். தொடர்ந்து பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேதமந்திரங்கள் முழங்க கன்னிகாதானம், பூணூல் மாற்றுதல், காப்புக்கட்டுதல், மாலைமாற்றுதல், முதலிய நிகழ்வுகளைத் தொடர்ந்து திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது. பின்னர் வாத்திய கோஷம் முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது. பிரசாதமாக பெண்களுக்கு மாங்கல்யகயிறு, குங்குமம், மஞ்சள், வழங்கபட்டன. பின்னர் கோயில் வளாகத்தில் திருமண விருந்து நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முருகன் கந்தசஷ்டி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்