< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
திருவாடானையில் கந்தசஷ்டி விழா
|30 Oct 2022 11:22 PM IST
திருவாடானையில் கந்தசஷ்டி விழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங் களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலசுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிக் கவச அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலையில் திருவாடானை நகரின் முக்கிய வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.