ராமநாதபுரம்
கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
|ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
காப்புகட்டு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி சூரசம்கார விழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ராமநாதபுரத்தில் உள்ள குண்டுக்கரை சாமிநாத சாமி கோவில் மற்றும் வழி விடு முருகன் கோவிலும் நேற்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. குண்டு கரை சாமிநாத சாமி கோவிலில் சாமிநாத சாமிக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளும் நடைபெற்றன. வழிவிடு முருகன் கோவிலிலும் காப்பு கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ளே உள்ள முருகன் சன்னதி மற்றும் மேலவாசல் முருகன் சன்னதியிலும் காப்பு கட்டி கந்த சஷ்டி விழா தொடங்கியது.
பக்தர்கள் விரதம்
நேற்று முருகப் பெருமானுக்கு காப்பு கட்டப்பட்டு கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளிலும் கோவிலில் வந்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி அன்று சூரசம்கார நிகழ்ச்சியும் 31-ந் தேதி அன்று முருக பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.