< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
விமான நிலையத்தில் ஆயுத பூஜை விழா
|18 Sept 2022 3:49 AM IST
விமான நிலையத்தில் ஆயுத பூஜை விழா நடந்தது.
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் விஸ்வகர்மா ஜெயந்தியை யொட்டி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், பிஸ்டல்கள் ஆகியவற்றை வைத்து கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் ஆயுத பூஜை கொண்டாடினர். இதில், விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப்படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் மற்றும் ஆய்வாளர்கள் வெங்கடேஸ்வர யாதவ், நித்ய கல்யாணி மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.