< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில் பால்குட விழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அம்மன் கோவில் பால்குட விழா

தினத்தந்தி
|
8 Sept 2022 7:22 PM IST

அம்மன் கோவில் பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள லெட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பூமாரி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கிய இந்த விழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக் கடனாக அக்னி சட்டி, கரும்பு தொட்டி ஆகியவற்றை எடுத்து வந்தனர்.தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பால்குடத்தை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்