< Back
மாநில செய்திகள்
கதிர்வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கதிர்வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேக விழா

தினத்தந்தி
|
5 Sept 2022 11:13 PM IST

பனைக்குளம் ஊராட்சி சோகையன்தோப்பு கதிர்வேலாயுத சாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பனைக்குளம்,

பனைக்குளம் ஊராட்சி சோகையன்தோப்பு கதிர்வேலாயுத சாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சி சோகையன்தோப்பு கிராமத்தில் கதிர்வேலாயுத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்வ கணபதி, நாகநாதர், கல்யாண முருகன், காசி விசுவநாதர், தட்சிணா மூர்த்தி, துர்க்கை, அய்யப்பன், நவக்கிரகங்கள், கால பைரவர், ஆஞ்சநேயர், இடும்பன்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று யாகசாலையில் இருந்து ராமநாதபுரம் அரண்மனை ராஜேசுவரி அம்மன் கோவில் ராஜாராம் பட்டர், காரைக்குடி மணிகண்டன் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர்.

புனித நீர்

அதன் பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கதிர்வேலாயுதசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவிதா கதிரேசன், பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, வக்கீல் மோகன் பாபு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள், ராமநாதபுரம் வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் ஜோதிமணி மற்றும் வழுதூர் கிராம மக்கள், பனைக்குளம் பிரமுகர்கள், கிருஷ்ணாபுரம், பொன்குளம், தாமரை ஊரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடு

ஏற்பாடுகளை சோகையன்தோப்பு நாடார் உறவின் முறையினர், நாடார் வாலிப முன்னேற்ற சங்கத்தினர், விழா கமிட்டியினர் சார்பில் ராமலிங்கம், திலிப்குமார், கண்ணன, தங்கச்சாமி, ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, சூரிய நாராயணன், தங்கவேலு, சரவணக்குமார், சிவபெருமாள் சக்திவேல், நாராயணமூர்த்தி, ஜெபமாலை, ராமநாதன், எம்.பி முனிய சாமி மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்