< Back
மாநில செய்திகள்
108 சங்காபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

108 சங்காபிஷேகம்

தினத்தந்தி
|
4 Sept 2022 11:26 PM IST

108 சங்காபிஷேகம் நடந்தது.

சாயல்குடி,

கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் உள்ள ஏகநாதர் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏகநாதருக்கு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பம் அலங்காரம், புறப்பாடு செய்து விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் சாமிக்கு அபிஷேக அலங்காரம், பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்கள் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏகநாதருக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்