< Back
மாநில செய்திகள்
புனித ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை
மாநில செய்திகள்

புனித ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றம்

தினத்தந்தி
|
29 Aug 2022 11:47 PM IST

புனித ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி விலக்கு ரோட்டில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அருட்தந்தை ஜெயபதி அன்னையின் உருவம் தாங்கிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.தினமும் மாலை நவநாள் திருப்பலியும் அதனை தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி காலை சப்பரப்பவனியும், தொடர்ந்து திருவிழா திருப்பலியும் திருப்பலி முடிந்தவுடன் அன்னதானமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஆண்டிச்சியூரணி பங்குத்தந்தை தைரியநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்