ராமநாதபுரம்
75-வது சுதந்திர தின விழா
|75-வது சுதந்திர தின விழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் 75 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. யூனியன் தலைவர் முகமது முக்தார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, மேகலா, துணைத் தலைவர் செல்வி பாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில் வேல்முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஷாஜகான் பானு, ஜவகர் அலிகான் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் பேரூராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். திருவாடானை யூனியனில் உள்ள 47 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.