ராமநாதபுரம்
கமுதி பகுதியில் சுதந்திர தின விழா
|கமுதி பகுதியில் சுதந்திர தின விழா நடந்தது.
கமுதி,
கமுதி யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால் ஆகியோர் தலைமையில் யூனியன் துணை தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னி லையில் யூனியன் தலைவர் தமிழ்செல்வி போஸ் தேசியக் கொடி ஏற்றினார். அனைத்து பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கமுதி தாலுகா அலுவலகத்தில் நலிந்தோர் திட்ட தாசில்தார் அமலோ பாவ ஜெயராணி தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி ராமசுப்பிரமணியன், துணை தாசில்தார்கள் தென்னரசு, முத்துராமலிங்கம் சம்பத் ஆகியோர் முன்னி லையில் தாசில்தார் சிக்கந்தர் பபிதா தேசியக் கொடி ஏற்றினார். கமுதி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தேசிய கொடி யேற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலர் இளவரசி தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை முன்னிலையில் ஊராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், அனைத்து பேரூராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர். கமுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தேசியக்கொடி ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.