ராமநாதபுரம்
பரமக்குடியில் சுதந்திர தின விழா
|பரமக்குடியில் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடியில் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினம்
சுதந்திர தினத்தையொட்டி பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல்துறை துணை கண் காணிப்பாளர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தமிம் ராஜா ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்தனர். நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் திருமால் செல்வம் தலை மையில் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிந்தாமணி முத்தையா தேசிய கொடியேற்றினார். துணைத் தலைவர் சரயுராஜேந்திரன் உள்பட கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யாகுணசேகரன் தலைமையில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன் உள்பட கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு வங்கி
பரமக்குடி கூட்டுறவு நகர வங்கி தலைவர் வக்கீல் வடிவேல் முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சஞ்சய் காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் நாராயணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் கல்விக்குழு தலைவர் நாகநாதன் தலைமையில் டாக்டர் பார்த்தசாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளியின் தாளாளர் அமரநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். பாரதியார் நடுநிலைப் பள்ளியில் தாளாளர் குணசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் ஜமாத் தலைவர் ரபி அகமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் கமருல் ஜமாலுதீன், பொருளாளர் முகம்மது உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.
தொடக்கப்பள்ளி
ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளியில் வாணியர் சபை தலைவர் செல்லம் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் ஜெய பாரதி தேசிய கொடி ஏற்றினார். தாளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் கல்விக் குழு தலைவர் ராகா சரவணன் தலைமையில் அரிமா சங்க தலைவர் வக்கீல் தினகரன் கொடி ஏற்றினார். கல்வி குழு செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஷோபனா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.