சிவகங்கை
பைரவர் கோவிலில் அஷ்டமி விழா
|பைரவர் கோவிலில் அஷ்டமி விழா நடந்தது.
திருப்பத்தூர்,
திருக்கோஷ்டியூர் அருகே உள்ள வைரவன்பட்டி திருமெய்ஞான புரீஸ்வரர் கோவிலில் உள்ள மூல பாலகால பைரவர் கோவிலில் அஷ்டமி விழாவையொட்டி மூல பாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேய்பிறை அஷ்டமியையொட்டி திரு மெய்ஞானபுரீஸ்வரருக்கும், பாகம்பிரியாள் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.45 மணிஅளவில் மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் மகா பைரவ அஷ்டமி விழா தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கோவிலில் சுற்றுப் பிரகாரம் வழியாக சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வர மலர் தூவி வரவேற்றனர். மூலகால பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டு இருந்த புனித நீராலும் அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையி்ல் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ஜெயகணேஷ் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.