< Back
மாநில செய்திகள்
இளம் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

இளம் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா

தினத்தந்தி
|
8 July 2022 12:46 AM IST

இளம் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா நடந்தது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சிறூர் நடு நிலைப்பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா, சங்ககூட்டம், துளிர் திறனறிதல் தேர்வு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு காளையார்கோவில் தாலுகா இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மன் தெய்வீக சேவியர் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் லீமா வசந்தமேரி முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணைத்தலைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய செஞ்சிலுவை சங்க காளையார்கோவில் வட்டார பொருளாளர் ராமநாதன், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஆசிரியர் ஒருங் கிணைப்பாளர் சுரேஷ், ஆசிரியர்கள் அருள் டேவிட், ராமசாமி, ஜெசிமா பர்சானா உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சஜிதா நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்