< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை:  திமுகவினர் கொண்டாட்டம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை: திமுகவினர் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
13 July 2024 11:34 AM IST

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

சென்னை,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் துவக்கம் முதலே திமுக முன்னிலையில் உள்ளது. 7 சுற்றுகள் முடிந்த நிலையில், 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.

திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்