< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு

தினத்தந்தி
|
24 Jun 2024 12:27 PM IST

மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி (வயது 71), கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம்(ஜூலை) 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தி.மு.க., பா.ம.க., நா.த.க. ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள்(புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.

மேலும் செய்திகள்