< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி: வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி: வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு

தினத்தந்தி
|
13 July 2024 9:12 AM IST

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் போலி அடையாள அட்டையை வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் போலி அடையாள அட்டை வைத்திருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்