< Back
மாநில செய்திகள்
விஜயகரிசல்குளம் அகழாய்வில் கருங்கல் சுவர் கண்டுபிடிப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் கருங்கல் சுவர் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
1 Sept 2023 12:48 AM IST

விஜயகரிசல்குளம் அகழாய்வில் கருங்கல் சுவர் கண்டுபிடிப்பு

தாயில்பட்டி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கீழடி அகழாய்வை போன்று ஏராளமான பழங்கால பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

தங்கத்திலான தாலி சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. நாயக்கர் கால செப்பு காசுகள், வணிக முத்திரைகள், தந்தத்தில் செய்த பகடைக்காய், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

2-ம் கட்ட அகழாய்வுக்காக 8-வதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 5 அடி ஆழத்தில் கருங்கற்கள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட வட்ட வடிவிலான சுவர் போன்ற அமைப்பு தற்ேபாது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே இப்பகுதி முற்காலத்தில் தொழிற்கூடமாகவோ, மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்