< Back
மாநில செய்திகள்
என்னய்யா காசு...காசு... இணையத்தில் வேகமாக பரவி வரும் விஜயகாந்த் பேசிய வீடியோ
மாநில செய்திகள்

என்னய்யா காசு...காசு... இணையத்தில் வேகமாக பரவி வரும் விஜயகாந்த் பேசிய வீடியோ

தினத்தந்தி
|
28 Dec 2023 5:08 PM IST

நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா?அதுவே போதும் நமக்கு முடிஞ்சுடும்.

சென்னை,

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே அவர் இறப்பு குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியின் பிரச்சாரம் ஒன்றில் பேசிய வீடியோவில், "என்னோடது என்ன வேணாலும் நீ எடுத்துக்க. மக்கள் கொடுத்தது எடுத்தா எடுத்துக்கிட்டு போயா...எனக்கு தேவையே இல்லை. எனக்குன்னு ஏதோ ஒரு இடத்துல இடம் கொடுப்பீங்க இல்ல. என்னோட மனைவிக்குனு ஒரு இடம் இருக்குனு சட்டத்துல இருக்குல்ல. அதே போல என்னோட பிள்ளைக்கு இடம் இருக்கும்ல. அது கிடைச்சா எனக்கு போதும். எவ்வளவு பேர் இருக்கீங்க. நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா?அதுவே போதும் நமக்கு முடிஞ்சுடும். இத்தனை பேர் வீட்டுக்கு நான் போயிட்டு வந்தாலே முடிஞ்சுடும்.

என்னய்யா காசு காசு காசு...அடபோங்கயா நீங்களும் உங்க காசும். கோடி கோடியா சேர்த்து வைச்சு என்னயா பண்ண போறீங்க? எங்கயோ கொண்டுபோக போறீங்க? செத்தா கூட அரைஞான்கொடியை கூட அறுத்துட்டு தான் உள்ளே தூக்கி போட்டு புதைக்குறான். காசும் கிடையாது ஒன்னும் கிடையாது..." என இடிமுழக்கம் போல பேசி இருந்தார் விஜயகாந்த். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விஜயகாந்துக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்