விஜயகாந்த் பிறந்தநாள்: ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை போற்றுகிறேன் - கமல்ஹாசன்
|ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பர் விஜயகாந்தின் நினைவுகளை போற்றுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை
தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் மக்களுக்கு இனிப்புகளை அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில், ""இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்." என்று அதில் பதிவிட்டுள்ளார்.