< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதிகேட்டு, தமிழக அரசு கடிதம் - விஜயகாந்த் வரவேற்பு
|12 Oct 2022 7:37 PM IST
ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதிகேட்டு, தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதற்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரை இருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். இந்நிலையில், நடப்பு சீசனில் விவசாயிகளிடம் இருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதிகேட்டு, தமிழக அரசு கடிதம் அனுப்பியதை வரவேற்கிறேன்.
இது தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி. மழைக்காலம் தொடங்கி விட்டதால் மத்திய அரசிடம் விரைந்து அனுமதிபெற்று விவசாயிகளிடம் நெல்மணிகளை கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.