< Back
மாநில செய்திகள்
இந்திய கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர் காயம் - விஜயகாந்த் கண்டனம்
மாநில செய்திகள்

இந்திய கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர் காயம் - விஜயகாந்த் கண்டனம்

தினத்தந்தி
|
22 Oct 2022 9:23 PM IST

இந்திய கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர் காயம் அடைந்ததற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காரைக்காலில் இருந்து கடந்த 15-ந்தேதி படகில் சென்ற 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்திய கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் தற்போது இந்திய கடற்படையே நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

தமிழகத்தில் மாறி மாறி ஆளும் கட்சிகள் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. தண்ணீரில் வாழ்கிற மீனவர்களின் வாழ்க்கை கண்ணீரிலேயே முடிந்து விடக்கூடாது. மத்திய-மாநில அரசுகள் இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீனவர் வீரவேலுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்