< Back
மாநில செய்திகள்
கார்கோடக நாதர் கோவிலில் விஜயதசமி விழா
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கார்கோடக நாதர் கோவிலில் விஜயதசமி விழா

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறை அருகே கோடங்குடி கார்கோடக நாதர் கோவிலில் விஜயதசமி விழா நடந்தது.

மயிலாடுதுறை அருகில் கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ள கைவல்லி அம்பிகை உடனான கார்கோடகநாதர் சாமி கோவிலில் நேற்று விஜயதசமி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கும், அம்பாளுக்கும் சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கார்கோடக நாதர் இறைப்பணி மன்ற நிர்வாகி கவிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்