< Back
மாநில செய்திகள்
அரசியல் நிகழ்வுகளில் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்
மாநில செய்திகள்

'அரசியல் நிகழ்வுகளில் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்' - கார்த்தி சிதம்பரம்

தினத்தந்தி
|
22 Aug 2024 10:09 PM IST

அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், கட்சியை தொடங்குவதும், கொடியை வெளியிடுவதும் எளிது எனவும், விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"அரசியல் கட்சியை தொடங்குவதும், கொடியை அறிமுகப்படுத்துவதும் பெரிய விஷயம் கிடையாது. இந்தியாவில் நடக்கும் அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. விவகாரம், நதிநீர் பங்கீடு, வக்புவாரிய சட்டம், நேரடி நியமன பதவி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் விஜய் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்."

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்