< Back
மாநில செய்திகள்
 வாரிசு வெற்றிபெற 108 தோப்புக்கரணம் போட்டு  நூதன பிரார்த்தனை செய்த விஜய் ரசிகர்கள்...!
மாநில செய்திகள்

" வாரிசு" வெற்றிபெற 108 தோப்புக்கரணம் போட்டு நூதன பிரார்த்தனை செய்த விஜய் ரசிகர்கள்...!

தினத்தந்தி
|
8 Jan 2023 10:40 AM IST

விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் நூதன பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் நூதன பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் விநாயகர் சன்னதியில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் வினோத பிரார்த்தனை செய்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்த விஜய் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் அனைவருக்கும் அன்னதாமும் வழங்கினர்.

மேலும் செய்திகள்