சீமானுடன் விஜய் கூட்டணியா? - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
|தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
சென்னை,
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன அவசரமே வேண்டாம். நாங்கள் இப்போதே மக்கள் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். சீமானின் நாம் தமிழர் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தலைவர் விஜய்தான் முடிவெடுப்பார்.
நாங்கள் எங்கள் தலைவர் சொல்லும் பணிகளை செய்து கொண்டே இருக்கிறோம். அடுத்ததாக நாமக்கலில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறக்கப்படும். பதினெட்டாம் தேதி எந்த ஒரு நிர்வாகிகள் கூட்டமும் இல்லை. அந்த தகவல் எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.