< Back
மாநில செய்திகள்
விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் கருத்தரங்கம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் கருத்தரங்கம்

தினத்தந்தி
|
14 Jun 2023 10:48 PM IST

திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் எம்பவர் நர்சிங் விப் சாப்ட் ஸ்கில்ஸ் என்ற 8-வது ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

.திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் எம்பவர் நர்சிங் விப் சாப்ட் ஸ்கில்ஸ் என்ற 8-வது ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விக்னேஷ் கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை தாங்கி பேசினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். ஸ்ரீ ராமசந்திரா நர்சிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.ஜே.நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த கருத்தரங்கில் திருவண்ணாமலை அருணை நர்சிங் கல்லூரி, அல்- அமீன் நர்சிங் கல்லூரி, விக்கிரவாண்டி இ.எஸ். நர்சிங் கல்லூரி, வந்தவாசி ஏ.ஏ.பி. நர்சிங் கல்லூரி, தன்வந்திரி நர்சிங் கல்லூரி, கிருஷ்ணகிரி ஜீவா நர்சிங் கல்லூரி மாணவர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இதில் விக்னேஷ் நர்சிங் கல்லூரி பேராசிரியை ஏ.பத்மாவதி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் விக்னேஷ் கல்லூாி பேராசிரியை ஆர்.ஜெயலட்சுமி வரவேற்றார். விக்னேஷ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை தாங்கி கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் வி.பூவராகவன் கருத்தரங்கு அறிக்கையை வாசித்தார். முடிவில் கல்லூரி பேராசிரியர் உதயசங்கரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்