திருச்சி
கண்காணிப்பு கேமரா காட்சியை நவீனப்படுத்தி கொள்ளையனை தேடும்பணி தீவிரம்
|கண்காணிப்பு கேமரா காட்சியை நவீனப்படுத்தி கொள்ளையனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் வளாகத்தில் செயல்பட்டுவந்த கூட்டுறவு வங்கியில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.ஒரு கோடியே 43 லட்சம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பதிவான கண்காணிப்பு காட்சிகள் தெளிவாக இல்லாத நிலையில், தற்போது அதனை நவீன வசதிகளை பயன்படுத்தி தெளிவாக மாற்றி அதில் பதிவான மர்மநபரை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த வீடியோ பதிவை பெல் ஊழியர்கள், பாதுகாவலர்களுக்கு அனுப்பி கெள்ளையனை அடையாளம் தெரிந்தால் உடனே 9659883888 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, திருச்சி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.