< Back
மாநில செய்திகள்
தனிப்பயிற்சி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருவாரூர்
மாநில செய்திகள்

தனிப்பயிற்சி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தினத்தந்தி
|
15 July 2022 11:15 PM IST

திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் தனிப்பயிற்சி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் தனிப்பயிற்சி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருத்துறைப்பூண்டியில் தனிப்பயிற்சி மையம் நடத்தி வரும் காமராஜ் நண்பரான சந்திரகாசன் என்பவரின் தனிப்பயிற்சி மையத்தில் சோதனை நடைபெற்றது.

பரபரப்பு

இந்த சோதனையின் போது சந்திரகாசன் ஊரில் இல்லை. இதனால் நேற்று மீண்டும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது தனிப்பயிற்சி மையத்தில் சோதனை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்