< Back
மாநில செய்திகள்
தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
21 Aug 2022 9:19 AM IST

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 18 வயதை கடந்தவர்களில் 96.99% பேர் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்