< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Jan 2023 6:52 PM IST

செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் அசுத்தம் கலந்த சாதிவெறியர்களை இதுவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காஞ்சீபுரம், செங்கல்பட்டு மையமாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ஆதவன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், வக்கீல் சொக்கலிங்கம் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புச்செல்வன், முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ரவீந்திரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. பனையூர்.மு.பாபு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தென்னவன், சாந்தன், ஜனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணைசெயலாளர் வெங்கட் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்