< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பேருந்தில் பயணியை நடத்துனர் எட்டி உதைத்த விடியோ காட்சிகள் வைரல்
|28 May 2022 6:34 PM IST
பொன்னேரியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த நபரை நடத்துநர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
திருவள்ளூர்,
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் செங்குன்றம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். தச்சூர் அருகே பேருந்து சென்ற போது நடத்துனரான தேவனுக்கும், ஹரிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று சமரசமான நிலையில் நடத்துனர் தேவன், ஹரியை எட்டி உதைத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.