< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
|28 Jan 2024 7:20 PM IST
அவரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று சென்னை வந்தடைந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
இந்த நிகழ்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.