< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோடு வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
|21 Sept 2023 3:18 AM IST
ஈரோடு வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திப்ரூகார்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரெயிலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்தநிலையில் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அந்த பையை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ரெயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா பொட்டலங்களை யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்று ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.