< Back
மாநில செய்திகள்
வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலையர் பட்டமளிப்பு விழா
கரூர்
மாநில செய்திகள்

வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலையர் பட்டமளிப்பு விழா

தினத்தந்தி
|
10 April 2023 12:01 AM IST

கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான மழலையர் பட்டமளிப்பு விழா, பாராட்டு விழா பள்ளியின் டாக்டர் கலாம் கூடலரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆர்த்தி ஆர்.சாமிநாதன் தலைமை தாங்கி உரையாற்றினார். பள்ளி ஆலோசகர் பி.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் டி.பிரகாசம் அறிமுக உரையாற்றினார். 1-ம் வகுப்பு மாணவி ஆர்.மரியம்ஹனியா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கரூர் வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளியில் 2015-16-ம் கல்வியாண்டில் பயின்று தற்போது திருச்சி காவேரி மருத்துவமனையில் இதய நோய் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர்.எம்.சமுத்ரா கலந்து கொண்டு பிரீ.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரை, முட்டை, இறைச்சி, சிறுதானிய உணவு வகைகளான கம்பு, ராகி, தினை, மூங்கிலரிசி, முளைகட்டிய பயறு வகைகள் போன்ற உணவு வகைகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். துரித உணவுகளான நூடுல்ஸ், பானிபூரி, பீட்சா, பப்ஸ் போன்ற உணவு வகைகளை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் கட்டாயம் பால் பருக வேண்டும். செல்போன் பயன்படுத்தக்கூடாது.

மாலை நேரங்களில் நன்றாக விளையாட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுத்து அரவணைக்க வேண்டும், என்றார்.

விழாவில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் நடனம், ஆங்கில உரையாடல், கதை, பழமொழிகள் கூறுதல், திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் யு.கே.ஜி. மாணவி கே.எஸ்.யாழினி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்