< Back
மாநில செய்திகள்
வெற்றி துரைசாமி மறைவு - பிரேமலதா இரங்கல்
மாநில செய்திகள்

வெற்றி துரைசாமி மறைவு - பிரேமலதா இரங்கல்

தினத்தந்தி
|
12 Feb 2024 10:34 PM IST

வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:

"முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வெற்றியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்