< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கால்நடை சிகிச்சை முகாம்
|22 Oct 2023 12:13 AM IST
கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நொய்யல் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். மண்டல துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்த விழி்ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும், விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டன.