< Back
மாநில செய்திகள்
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
23 Dec 2022 6:41 PM GMT

முதுகுளத்தூர் அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கிராமத்தில் கால்நடை தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி புயல்நாதன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர்கள் சிவக்குமார், நேரு, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, வினிதா ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். கால்நடைகளுக்கு தடுப்பூசி செயற்கை முறை கருவூட்டல் சினைப் பரிசோதனை கன்றுகள் மட்டும் மாடுகளுக்கு குடல்புழு நீக்கம் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பு ஊசி தாது உப்புக் கலவை வழங்கினார்.

இதில் மாடுகள் 153, வெள்ளாடு 612, செம்பறி ஆடு 432 செல்லப் பிராணிகள் 24, கோழிகள் 198 உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதனால் 126 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள் வீரன் முனீஸ்வரி கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயதாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்