காஞ்சிபுரம்
இலுப்பப்பட்டு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்
|காஞ்சீபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு கிராம ஊராட்சியில் நடைபெற்றது.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. க.செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பரிசுகளை வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்கள். இதில் காஞ்சீபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி மேற்பார்வையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பிஎம்.பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் உலகநாதன், லோகு தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் இலுபப்பட்டு சுகுணா தேவேந்திரன், சிங்காடிவாக்கம் சுரேஷ், அத்திவாக்கம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.