< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவப் படிப்பு: நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பம்
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவப் படிப்பு: நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
13 Sept 2022 6:43 PM IST

கால்நடை மருத்துவப் படிப்புக்கு நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் நேற்று (செப்.12) முதல் தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பத்தாரர்கள் www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளில் 680 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பத்துள்ளதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்